
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. வாழ்த்தரங்கத்தில் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக செய்த சாதனைகள் மற்றும் தமிழக முதலமைச்சராக செய்த சாதனைகள் என பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது “ “தமிழகத்தில் கொண்டு வரும் திட்டத்தைப் போலவே கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டுமின்றி பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுபோன்ற திட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்று சொன்னால் தொலைநோக்கு திட்டங்களை முன்கூட்டியே யோசித்து செயல்படுத்துபவர் நமது தமிழக முதலமைச்சர். அடுத்த தேர்தலை சிந்திப்பவர்களுக்கு மத்தியில் அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பவர் தமிழக முதலமைச்சர் இவ்வாறு அவர் பேசினார்.
மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில் “ஆண்களின் சிரமத்தை குறைப்பதற்காக தான் பெண்களுக்கான திட்டங்களை கொண்டுவந்து பெண்களின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து முதலமைச்சர் போராடி வருகிறார். பல்வேறு துறைகளில் தமிழகம் வளர்ச்சி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் பேச்சாளர்கள் தமிழக முதலமைச்சரின் சாதனைகள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும் பேசினார்.