Skip to main content

பாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா? திமுகவா? பாஜகவை வெறுப்பேற்றிய அமைச்சர்கள்

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

"அதிமுக அமைப்பது ராஜ்ய கூட்டணி , திமுக அமைப்பது பூஜ்ய கூட்டணி" என்று நாகப்பட்டினத்தில் நடந்த அதிமுக அலுவலகத்திறப்பு விழா கூட்டத்தில் பேசினார்கள் அதிமுக அமைச்சர்கள்.

 

அதிமுக அலுவலகம் நாகப்பட்டினம் ஈசிஆர் சாலையில் புதிதாக கட்டி ஏற்கனவே திறந்துவிட்டனர். ஆனால் திறப்புவிழா என்கிற பெயரில், விடியற்காலையில் யாகம் வளர்த்து திறப்புவிழா செய்தனர், அதே வேலையில் அங்கு ஆலோசனை கூட்டத்தையும் நடத்திவிட்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட முழுவதிலிருந்தும் வழக்கம் போல் கூட்டம் திரட்டுவதுபோல் வேன்கள், கார்கள், மூலம் தொண்டர்களை கொண்டு வந்து குவிந்திருந்தனர்.  வந்தவர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணியும், பாயாவும்  விருந்தாக அளிக்கப்பட்டது.

 

admk

 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார் "லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 40 தொகுதியிலும் வெற்றி கிடைக்கும், அதற்கு நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதிமுக கூட்டணியில் பாமக வந்ததும் திமுக தலைவர் ஸ்டாலினால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதிமுக அமைப்பது தான் ராஜ்யகூட்டணி, திமுக அமைப்பது பூஜ்ய கூட்டணி. நாங்கள் பாஜகவிற்கு அடிமை கட்சி என்று திமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இந்த நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக விற்கு வெறும் 5 தொகுதிகள் தான். ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கோ 10 தொகுதிகள். இதிலிருந்தே தெரியவில்லையா யார் அடிமை கட்சி என்று. பொங்கலுக்கு ஆயிரம் தற்போது 60 லட்சம் பேருக்கு இரண்டாயிரம் என்று அறிவித்ததுமே திமுகவினர் அலறிக்கொண்டு தேர்தலை சந்திக்க பயந்துநிற்கின்றனர்." என ஆக்ரோசமாக பேசி முடித்தார்.

 

admk

 

நாகை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பேசுகையில்" தமிழக அரசு சார்பில் தேசிய விநாயகம் பிள்ளை, பெரும்பிடுகை முத்தரையர், இரட்டைமலை சீனிவாசன், பழனிச்சாமி கவுண்டர், சர்ஏடி பன்னீர்செல்வம், உள்ளிட்டவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும், கர்னல் ஜான் பென்னிகுயிக், காளிங்கராயர், அழகுமுத்துக்கோன், மா. பொ. சிவஞானம், ஆதித்தனார் , ஆகியோர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருப்பது எங்களுக்கு வெற்றியை தறும்". என்றார்.

 

 

"இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து  வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான எந்த முன்மொழிவும் செய்யவில்லையே என விவசாயிகள் மத்தியில் இருக்கும் குமுறலையும் அங்கு கேட்க முடிந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.