Skip to main content
Breaking News
Breaking

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட  மருந்தாளுநர் நலக் கூட்டமைப்பினர்! (படங்கள்)

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

 

பட்டைய மருந்தாளுநர்களின் டிப்ளமோ பார்மசிஸ்ட் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிப்பதை கைவிடக்கோரி தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் நலக் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

 

அவர்களது கோரிக்கைகளான, தமிழக அரசுத் துறையில் பட்டய மருந்தாளுநர்கள் வேலைவாய்ப்பு உரிமையைக் கைவிட வேண்டும். மக்கள் நலன் கருதி அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை டிப்ளமோ பார்மசிஸ்ட் படித்தவர்களைக் கொண்டு நிரப்பிட வேண்டும். தமிழக மாணவர்கள் நலன் கருதி ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். தமிழக மக்கள் நலன் கருதி ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி பங்கு மற்றும் வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்கிட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்