Skip to main content

கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை தேவை - மருத்துவ வல்லுநர் குழு அறிவுரை!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

Survivors from Corona need caution-Medical Expert Panel Advice!

 

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கின் பலனாக தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இந்நிலையில், கரோனா பாதிப்பால் ஏற்படும் மற்றொரு பதிப்பான கருப்பு பூஞ்சை நோய்க்கு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு பல்வேறு முறைகளில் வலியுறுத்தி மருந்து குப்பிகளைப் பெற்றுவருகிறது.

 

ஏற்கனவே தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை தாக்கம் குறித்து ஆராய மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தக் குழுவானது, தமிழ்நாடு அரசிடம் ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ‘கருப்பு பூஞ்சை தாக்காமல் இருக்க கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என மருத்துவ வல்லுநர் குழு அறிவுரை வழங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்