கடந்த காலத் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் நடிகர் ,நடிகைகளை ஈடுபடுத்தி மக்களை கவர்ந்து இழுத்தனர் .இதில் பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பெருமளவில் நடிகர் நடிகைகளை ஈடுபடுத்தினர். இந்த இரண்டு கட்சிகளுக்கும் பிரச்சார நேரத்தில் நடிகர் ,நடிகைகளே பிரச்சார பீரங்கிகளாக இருந்தனர். இவர்களை பார்க்கவே கூட்டம் கூடும் என்பதால் இவர்களைப் பயன்படுத்தினர் . கடந்த தேர்தலில் வடிவேலு , சிங்கமுத்து , விந்தியா , சிம்ரன் , குஷ்பு , ராமராஜன் , கருணாஸ் ,பாக்கியராஜ் , செந்தில் , நமீதா , கோவை சரளா , தியாகு , குண்டு கல்யாணம், விக்னேஷ் இன்னும் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் .


இப்பொழுது தேர்தல் என்றாலே பணம் , மது , பிரியாணி என்று வாக்காளர்களின் எண்ணமும் கொஞ்சம் மாறி இருப்பதால் இதற்க்கு செலவு பண்ணவே கட்சிகள் அதிகளவு பணத்தை செலவு செய்கின்றனர் . இது மட்டுமில்லாமல் பெரிய தலைவர்களின் பிரச்சாரங்கள் மற்றும் மாநாடுகளுக்கு இன்னும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது . இதனால் இந்த தேர்தலில் பெரிய அளவில் நடிகர்கள் ,நடிகைகளை ஈடுபடுத்தினால் இன்னும் செலவு அதிகம் ஆகும் என்பதால் பிரதான கட்சிகளான திமுகவும் , அதிமுகவும் இந்த முறை மிக குறைந்த அளவே நடிகர் , நடிகைகளை பயன்படுத்துகின்றனர் . இதனால் மக்கள் அதிகமாக எதிர் பார்த்த சினிமா நட்சத்திரங்கள் வராத காரணத்தால் கொஞ்சம் களையிழந்து காணப்படுகிறது . இதிலிருந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்கு செலவு செய்வதை குறைத்து வாக்காளர்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டிருக்கின்றனர் .