
பிரபல டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். போட்டி இன்று(22.03.2025) முதல் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநகரங்களில் நடைபெறும் இந்த தொடர் மே மாதம் வரை நடைபெறுகிறது. முதல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், கொல்கத்தாவில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வழக்கம் போல் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய நடக்கும் தொடக்க விழா பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இதில் நடிகரும் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் கலந்து கொண்டு தனது பிரபலமான போஸை செய்து காண்பித்தார். பின்பு அவருடன் மேடை ஏறிய விராத் கோலி அவருடன் இணைந்து நடனமாடினார். இது அங்கிருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
பின்பு தேசிய விருது பாடகி ஷ்ரேயா கோஷல் பாடல் பாடினார். இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை திஷா பதானி நடனமாடினார். அடுத்து பஞ்சாபி பிரபல பாடகர் கரண் அவுஜ்லா பாடல் பாடி ரசிகர்களை ஆரவாரமாக்கினார்.