கவிக்கோ அப்துல்ரகுமானின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருவான்மியூர் பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில், மரம் நடும் நிழ்ச்சியும் சிறப்புத் தொழுகையும் நினைவேந்தல் உரையரங்கும் நிகழ்ந்தது. கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் கவி ஜலாலுதீன் முன்னிலையில், கவிவேந்தர் மு.மேத்தாவும் கவிக்கோ பேரன் டாக்டர் அசீம் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். மலரஞ்சலி சிறப்புத் தொழுகைக்குப் பின் கவிவேந்தர் மு.மேத்தா, கவிக்கோவின் நினைவுகளை நெகிழ்வோடு பகிர்ந்து கொண்டார். கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிக்கோவின் கவிதைகளை நினைவுகூர்ந்தார். கவிஞர் அருள்மொழி நினைவுக் கவிதை வாசிக்க, பத்திரிகையாளர்கள் சாவித்ரி கண்ணன், ’தி இந்து’ மானா.பாஸ்கரன், ’மாலைமுரசு’ இளங்கோவன், கவிஞர் யாழினி முனுசாமி, நூருல்லா, சேக், நெடுமாறன், பாசிகாபுரம் வெங்கடேசன், இலக்கியன், ஜோதி, சொர்ணபாரதி ஆகியோர் கலந்துகொண்டு கவிக்கோவின் நினைவுகளைப் போற்றினர்.
- தமிழ்சூர்யா