
மேற்கு வங்கத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், பிரபல விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி அவர் தங்கியிருந்த சொகுதி விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பெண் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டு அவரது கணவர் ஹரியானாவின் குர்கான் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திருப்பிய அந்த பெண் தன்னை மருத்துவமனை ஊழியர்கள் ஐ.சி.யு.வில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது கணவரிடம் கூறியுள்ளார். மேலும், வெண்டிலேட்டர் இருந்ததால் என்னால் பேசமுடியவில்லை, லேசான மயக்கத்தில் இருந்தேன் அதனால் ஒன்றுமே செய்யமுடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.