Skip to main content

'கோலம் போட்டதால் கைது செய்யப்படவில்லை'- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம்!

Published on 01/01/2020 | Edited on 01/01/2020

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதால் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன. வெளி மாநில குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் சென்னை காவல்துறை சிறந்து விளங்குகிறது. விபத்துகளில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன. காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் 10 லட்சம் பேர் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர். 

chennai district police commissioner ak viswanathan press meet


ஆதாய கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. கோலம் போட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை. ஏற்கனவே போட்ட கோலத்தில் 'NO CAA' என எழுதியுள்ளனர். வீட்டின் உரிமையாளர் ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என கேட்டபோது முழக்கம் எழுப்பியதால் கைது செய்யப்பட்டனர்". இவ்வாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார். 


 

சார்ந்த செய்திகள்