Published on 05/05/2022 | Edited on 05/05/2022
திருச்சி மண்ணச்சநல்லுார் திருப்பைஞ்சலி பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து என்பவரின் மனைவி சாந்தி (38). விவசாய கூலி தொழிலாளியான இவர் வேலை முடிந்து வந்து வீட்டின் முன்பு படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர். விழித்தெழுந்த சாந்தி ஒரு நபரை பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் சாந்தியை இழுத்து கீழே தள்ளி விட்டுள்ளார். அதன் பின்னர் 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் தப்பித்து சென்றுள்ளனர். இது குறித்து மண்ணச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி சென்ற மூன்று மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.