Published on 14/06/2020 | Edited on 15/06/2020
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னையில் 11 ஆம் நாளாக கரோனா ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது என்ற நிலையில் தொடர்ந்து வருகிறது. சென்னையில் இதுவரை 30,444 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை கரோனா உறுதியான 277 பேர் மாயமானதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி அளித்த பட்டியலைக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தவறான முகவரி, செல்போன் எண் கொடுத்த 277 பேரையும் கண்டறியும் முயற்சியில் தற்போது போலீசார் களமிறங்கியுள்ளனர். இந்தத் தகவல் தற்போது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.