இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான 22வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா கடந்த 12ஆம் தேதியிலிருந்து 19 தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட பிரிவில் 27 படங்கள் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திரைப்பட விழாவின் நிறைவு விழா நடைபெற்று சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த படத்திற்கான விருதை ராஜ்குமார் பெரியசாமியின் ‘அமரன்’ திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டு, ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படத்திற்கான விருதை தமிழரசன் பச்சைமுத்துவின் லப்பர் பந்து படத்திற்கு கொடுத்ததோடு, ரூ. 50ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஸ்பெஷல் ஜூரி சிறந்த திரைப்படத்திற்கான விருதை பாரி இளவழகனின் ஜமா படத்திற்கு கொடுத்து, ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதை அமரன் படத்திற்காக சாய் பல்லவி வாங்கினார். மேலும் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோருக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் விருதுகள் பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு...
பேவரைட் நடிகர் - அரவிந்த் சாமி (மெய்யழகன்)
பேவரைட் நடிகை - அன்னா பென் (கொட்டுக்காளி)
சிறந்த பொழுதுபோக்கு படம் - வேட்டையன்
சிறந்த ஒளிப்பதிவாளர் - (அமரன்) படத்திற்காக சி.ஹெச் சாய்க்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது
சிறந்த படத்தொகுப்பாளர் - (மகாராஜா) படத்திற்காக பிலோமின் ராஜ்-க்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது
சிறந்த ஒலிப்பதிவாளர் - (கொட்டுக்காளி) படத்திற்காக சூரன், அழகியகூத்தன் ஆகியோருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன்வேல் (வாழை)
சிறந்த குணச்சித்திர நடிகர் - அட்டகத்தி தினேஷ் (லப்பர் பந்து)
சிறந்த குணச்சித்திர நடிகை - துஷாரா விஜயன் (வேட்டையன்)
சிறந்த எழுத்தாளர் - நிதிலன் சுவாமிநாதன் (மகாராஜா)
சிறந்த இசையமைப்பாளர் - ஜிவி பிரகாஷ் குமார் (அமரன்)
சிறந்த கலை இயக்குனர் - எஸ்.எஸ்.மூர்த்தி (தங்கலான்)
சிறந்த சமூக படம் - நந்தன்
ஸ்பெஷல் ஜூரி விருது - மாரி செல்வராஜ் (வாழை), பா.இரஞ்சித் (தங்கலான்) சீனு ராமசாமி (கோழிப்பண்ணை செல்லதுரை)
ஸ்பெஷல் ஜூரி விருது - யோகிபாபு (போட்)
அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது - அருள்நிதி
நம்பிக்கை நட்சத்திரம் விருது - அர்ஜுன் தாஸ் (ரசவாதி)
சிறந்த குறும்படம் - கயமை