Published on 20/12/2024 | Edited on 20/12/2024

பத்து ரூபாய் நாணயங்கள் குறித்து அவ்வப்போது வதந்தி பரவுவது வாடிக்கையாகி வருகிறது. பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது எனவே வாங்க மாட்டோம் என சில பகுதிகளில் மறுக்கும் சம்பவங்கள் புகாராகவும் உருவெடுத்து வருகிறது.
இந்த வதந்திகளால் சில பகுதிகளில் மக்கள் மற்றும் கடைக்காரர்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வரும் நிலையில் கடலூரில் இதுபோன்று பத்து ரூபாய் நாணயங்களை சில இடங்களில் வாங்க மறுப்பது தொடர்பாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் 'பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும். யாரேனும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் பட்சத்தில் உடனடியாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்' என மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.