Skip to main content

அதிகாலையிலேயே அதிர்ச்சி; ஆம்னி பேருந்து விபத்து;27 பேர் படுகாயம்

Published on 22/12/2024 | Edited on 22/12/2024
Early morning shock; Omni bus accident; 27 injured

கடலூரில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ராமநத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து ஒன்று அதிகாலை நேரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மொத்தம் 54 பயணிகள் அந்த ஆம்னி பேருந்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் 27 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்