Published on 22/12/2024 | Edited on 22/12/2024
சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனர். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மற்றும் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பாராளுமன்றத்தில் உரையாற்றியது ஆகியவை பேசு பொருளாகி இருக்கும் நிலையில் இன்று நடைபெற இருக்கும் திமுக செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.