Skip to main content

என் அம்மா தான் என் கணவருக்கு மனைவி... அதிர வைத்த இளம்பெண்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்! 

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

கன்னியாகுமரி பகுதியில் 15 வயதில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், 25 வயது ஆன நிலையில் இளைஞர் ஒருவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களியக்காவிளை காஞ்சாம் புறம் வயக்கலூரை சோ்ந்த ரமேஷ் குமாா்(39) க்கும் தக்கலை பகுதியை சோ்ந்த பிாித்தி (27) க்கும் 2009-ல் பிாித்தியின் தாயாா் விருப்ப படி பாறச்சாலை பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது. இவா்களுக்கு விஷ்ணுதேவ்(9), சமஸ்கிருதி ஆா் நாயா்(4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா். கேட்டாிங் தொழில் செய்து வந்த ரமேஷ்குமாா் 2017-ல் வெளிநாடு வேலைக்கு சென்றாா். 

 

incident


 

incident



பின்னா் சமீபத்தில் ஊருக்கு வந்த ரமேஷ்குமாாிடம் பிாித்தி இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்து விட்டு நான் தனியாக வாழ போகிறேனு சொல்லி கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னா் ரமேஷ்குமாா் மனைவியை எங்கும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடா்ந்து அவா் குழித்துறை மகளிர் காவல்நிலையம் மற்றும் தக்கலை காவல்நிலையத்தில் புகாா் கொடு்த்தாா்.

 

incident



இதைதொடா்ந்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் பிாித்தி திடுக்கிடும் தகவலை போலீசாாிடம் கூறினாா். அதில் ரமேஷ் குமாாரை எனக்கு திருமணம் செய்து வைக்கும்போது எனக்கு வயது 15 அப்போது எனக்கு திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் அம்மாவின் வற்புறுத்தலின் போில் பதிவு திருமணம் நடந்தது. இதில் நானும் அம்மாவும் பாா்ப்பதற்கு அக்கா தங்கை போல் இரட்டையா்கள் போல் இருப்போம். இதனால் பதிவு திருமணத்துக்கு என் பெயா் வயதை மறைத்து அம்மாவின் பெயா் சிந்து அதை என் பெயராக்கி அம்மாவின் வாக்காளா் அடையாள அட்டையில் அதை நான் தான் என குறிப்பிட்டு திருமணம் செய்து வைத்தனா். அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு தான் உண்மை சம்பவம் ரமேஷ்குமாருக்கு தொியவந்தது.

 

incident


 

incident



இந்தநிலையில் தான் நான் தற்போது முளகுமூடு பகுதியை சோ்ந்த அகில் (28) என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துள்ளேன். அவனுடன் தான் சட்டப்படியாக வாழ போகிறேன். ஆனால் சட்டப்படியாக எனக்கும் ரமேஷ்குமாருக்கும் திருமணம் நடக்கவில்லை. சட்டப்படி பாா்த்தால் என்  அம்மா சிந்துவுக்கும் ரமேஷ்குமாருக்கும்தான் சட்டப்படி திருமணம் நடந்து இருக்கிறது. எனவே அம்மா மீது தான் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரமேஷ்குமாருடன் சட்டத்துக்கு விரோதமாக இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளதால் அந்த குழந்தைகளை ரமேஷ்குமாருடன் ஒப்படைத்து விட்டேன் என்றாா். இந்த விசித்திர திருமணம் சம்பவம் போலீசை திக்குமுக்காட வைத்துள்ளது. மேலும் இதுபற்றி போலீசார் விசாாித்து வருகின்றனா்.

 

சார்ந்த செய்திகள்