Published on 29/08/2018 | Edited on 29/08/2018
அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ஒரு கட்சியில் ஒரு தலைவர் மறைந்ததால் அடுத்த தலைவர் வந்துள்ளார். அந்த முறையில் ஸ்டாலினை நீண்ட வருடங்களாக தலைவராக கொண்டுவர வேண்டும் என்று அவர் தந்தை இருந்த காலத்தில் இருந்து அத்தகைய எண்ணத்தில் இருந்தார்கள். அதே மாதிரி இப்போது ஸ்டாலின் தலைவராகி உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.