
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் மீது நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன் தினம் (27.02.2025) சீமான் நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். சம்மனில் குறிப்பிட்டிருந்தபடி சீமான் ஆஜராகாமல், அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இதன் காரணமாக நேற்று (28.02.2025) காலை 11 மணிக்குச் சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் சம்மனை போலீசார் ஒட்டினர். இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது. இதனால், சீமான் வீட்டு காவலருக்கும், போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வீட்டு காவலர் அமல்ராஜை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், சீமான் தர்மபுரியில் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சம்மனைக் கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?. என் கூட மோதி ஜெயிக்க முடிய வில்லை. என்னை பார்த்து நீ நடுங்கிட்ட, சமாளிக்க முடியல. என்ன செய்யனு தெரியாமல், அப்பப்போ ஒரு பெண்ணை கொண்டுவந்து முன்னாடி நிறுத்துகிறீர்கள்” என ஆவேசமாகப் பேசினார். மேலும் இணையத்தில் பயன்படுத்த முடியாத வகையில் “வயசுக்கு வந்த உடனே குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டுப் போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா க****சு விட்ட மாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க...” எனப் பேசினார். இது தற்போது சர்ச்சையாகி வருகிறது. சீமானின் அறுவறுத்தக்க பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீமானின் பேச்சுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சீமானின் பேச்சுகளை அவரது வீட்டில் இருக்கும் பெண்களே தட்டி கேட்க வேண்டும். அவரது கட்சியில் உள்ள பெண்களும் இதை தட்டிக் கேட்க வேண்டும். பெண்களை இதை விட பெண்களை கேவலமாக பேசுவதை எப்படி சகித்து கொண்டு அந்த கட்சியில் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.