கரோனோ வைரஸ் பிரச்சனையில உலகமே ஊரடங்கை அமலபடுத்தி மக்களை தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தினர். இநத நிலையில ஊரடங்கு முடியும் முன்பே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம சென்றதால், மதுக்கடைகளை திறக்க மீண்டும் அனுமதி கொடுத்தது. இந்த நீதிமன்ற தீர்ப்பையும் நீதிபதிகளையும் அவதூறு பரப்பியவர்களை திருச்சியில போலிசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி தில்லைநகரில் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் சாதிக்பாட்சா. இவர் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்ததன் காரணமாக உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவதூறாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார். இதன் காரணமாக கே.கே.நகர் போலிசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாதிக்பாட்ஷா அகில இந்திய முஸ்லீம் லீக் என்ற கட்சியைச் சேர்ந்தவர். கட்சியின் செய்தி தொடர்பாளர் முகமது யூசுப் இந்த பதிவுகளை பலருக்கு அனுப்பியதன் அடிப்படையில் அவரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.