








தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு பிந்தைய தேர்தல் பிரச்சாரத்தை சென்னை அருகே உள்ள ஆலந்தூரில் தொடங்கினார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் கூறியதாவது, "நேர்மையான, செம்மையான ஆட்சியைத் தேர்ந்தெடுங்கள். வீட்டுக்கொரு கணினி என்ற திட்டம் வைத்திருக்கிறோம்; இது இலவசம் என்று எண்ண வேண்டாம். அரசும், மக்களும் நேரடியாகப் பேசிக் கொள்வதற்கான ஆயுதம் அது; இது ஒரு முதலீடு. திருடும் அமைச்சர்கள் இல்லாமல் இருந்தால் நாடு சுபிட்சம் ஆகும்" என்றார்.
முன்னதாக, மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் ஆலந்தூருக்கு கமல்ஹாசன் சென்றார். போரூரில் இருந்து மயிலாப்பூர் வரை பிரச்சாரம் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பிரச்சாரம் வாகனம் மெதுவாகச் சென்றதால் கமல்ஹாசன் தனது சொந்த வாகனத்திற்கு மாறினார். இருப்பினும் மயிலாப்பூரில் நடைபெறவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.