பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது .தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி நிலையாக இருக்க வேண்டும். மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தொடர வேண்டும். 23-ந்தேதி தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.
மத்தியில் தாமரை மீண்டும் மலரும். தமிழ்நாட்டில் தி.மு.க. பல முறை ஆண்டு இருக்கிறது. ஆனால் அப்போது எல்லாம் தமிழகத்திற்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. இன்று மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார். அவர்கள் அதிகாரத்தில் இருந்த போது அவற்றை எல்லாம் செய்து இருக்கலாம். குறிப்பாக குடிநீர் பிரச்சனையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தொலைநோக்கு எண்ணத்தில் செயல்படாததால் இப்போது பிரச்சனை இருக்கிறது. காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது மோடி ஆட்சிதான். காங்கிரஸ், தி.மு.க. பலமுறை ஆட்சியில் இருந்த போதும் இதில் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.