திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது.
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/4cSj918Hp7EvlX3_ohUcFYMg0i5q79HrlPEDt5l5TB8/1582354784/sites/default/files/inline-images/580_1.jpg)
— D.M.KathirAnand (@dmkathiranand) February 21, 2020
இந்த நிலையில் துரைமுருகன் உடல்நிலை குறித்து அவரது மகனும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார். அதில், "அனைவருக்கும் வணக்கம். வலைதளங்களில் என் தந்தை துரைமுருகன் அவர்கள் மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அவர் பூரண நலத்தோடு வழக்கமாக நடைபெறக்கூடிய மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். பரிசோதனைகள் எல்லாம் நிறைவு பெற்றவுடன் இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என்று உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்." என கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.