தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் கட்சிப் பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.
அவர் அமர்ந்திருந்த பாஜக தலைவர் நாற்காலியில் யாரை அமர வைக்கலாம் என்கிற முடிவை எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது பாஜக தலைமை. கிட்டதட்ட 10க்கும் மேற்பட்டோர் அந்த பதவியை குறி வைத்துள்ளனர். சிலர் டெல்லியில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகள் சிலரை அணுகி தனக்கு அந்தப் பதவி கிடைக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.
இதனிடையே கர்நாடகாவில் நியமித்ததுபோல 40 வயதுக்கு உட்பட்ட ஒரு புதுமுகத்தைக் கொண்டு வருவதா? இல்லை அரசியல் அனுபவம் உள்ள ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருக்கும் ஒருவரை நியமிப்பதா? என்கிற கேள்வியை வைத்துக்கொண்டு, அதற்கு பதில் தேடி தாயக்கட்டையை உருட்டிக்கொண்டிருக்கிறது பாஜக தலைமை. மேலும், புதுத் தலைவரை தேர்ந்தெடுக்க 7 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைக்கும் யோசனையும் பாஜக தலைமையிடம் இருக்கிறதாம்.