Published on 26/09/2019 | Edited on 26/09/2019
![Kundrakudi Ponnambala Adigalar - K. Veeramani](http://image.nakkheeran.in/cdn/farfuture/VvOYHKtrzshyl7j4teSmzRf3ie50YtHq4u6CJcvqSog/1569490940/sites/default/files/inline-images/902_2.jpg)
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உடல் நலம் குன்றி காரைக்குடி அருகே உள்ள அப்பலோ ரீச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த தகவல் அமெரிக்கா பிலடெல்பியாவில் உள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் 25.09.2019 மாலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் தொலைபேசி மூலம், சந்நிதானம் பொதுச்சொத்து, பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் கடமை என்று தெரிவித்து, அவரது நலம் விசாரித்துப் பேசினார். விரைவில் நலமடைய வாழ்த்துக் கூறினார்.