தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களது பணிகளில் வேகம் காட்டிவரும் அதேவேளையில், தேர்தல் ஆணையமும் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, மொத்த வாக்காளர்கள் கணக்கெடுப்பு என அதன் பணிகளை செய்துவருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு, “தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,255 வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 4,512 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ 83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்களர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3.09 கோடி பேரும், பெண்கள் 3.19 கோடி பேரும், திருநங்கைகள் 7,192 பேர் உள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது வரை 8,158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.