கரோனா காலத்தில் நிதி நெருக்கடிகளை சமாளிக்க புதிய வாகனங்கள் எதுவும் வாங்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், தமிழக அரசுக்குப் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு தடை விதித்து அரசாணையும் பிறப்பித்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் நிதித்துறை.
ஆனால், அந்த அரசாணையை புறந்தள்ளிவிட்டு, 10 கோடி ரூபாய்க்குப் புதிய வாகனங்களை வாங்கியுள்ளது எடப்பாடி அரசு. இதற்கு நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அனுமதியும் வழங்கியுள்ளார்.
வாகனங்கள் வாங்கக் கூடாது என நிதித்துறையின் அரசாணை இருக்கும்போது, அந்த துறையின் செயலாளரே அதற்கு விதிவிலக்கு தந்து எடப்பாடி அரசின் நோக்கத்திற்கு உடந்தையாக இருக்கிறாரே என்கிற குரல்கள் தலைமைச் செயலகத்தில் எதிரொலிக்கிறது. இதுகுறித்த கோப்புகளின் நகல்கள் டெல்லிக்கு பறந்துள்ளதாம்!