அதிமுக கூட்டணியில் பாஜக , பாமக ,தேமுதிக , புதிய தமிழகம் , தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் , அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் அந்த கட்சி வேட்பாளர்களுக்கும் ,கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ள்ளனர். சமீப காலமாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரத்தில் ஒரு சில சலசலப்புகள் ஏற்படுகின்றன இதனால் அதிமுக தொண்டர்களும் , கூட்டணி கட்சி தொண்டர்களும் அதிர்ச்சியில் உள்ளனர் .பிரேமலதா நடவடிக்கையால் தேமுதிக தொண்டர்களும் கொஞ்சம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வந்துள்ளது .
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் . அப்போது ‘மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலிலும் இக்கூட்டணி நீடிக்கும். ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். ராமேஸ்வரம் முதல் சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு ரயில் போக்குவரத்து துவங்கப்படும். அதனால, பாஜ வேட்பாளருக்கு இரட்டை இலையில் ஓட்டு போடுங்க” என்றார். இதனைக் கேட்ட தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர் .இதனை கவனித்த பிரேமலதா, முன்பு அதிமுகவில் நயினார் நாகேந்திரன் இருந்தவர் அந்த நினைவில் கூறி விட்டேன்’’ என சொல்லிவிட்டு அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார் . இப்படி பிரசாரத்தின்போது தாமரை சின்னத்திற்கு பதிலாக, இரட்டை இலைக்கு வாக்கு கேட்டது அங்குள்ள கட்சி தொண்டர்களுக்கும் , பொது மக்களுக்கும் அதிருப்தியாக இருந்தது .