விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வெற்றியை கலைஞர் நினைவிடத்தில் சமர்பிப்போம் என்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதமசிகமணி அறிக்கை விடுத்துள்ளார். அவர் அறிக்கையில் கூறியதாவது
"கழகத்தலைவர் தளபதி அவர்களால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அண்ணன் நா.புகழேந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். புகழேந்தி அவர்கள் ஏறத்தாழ 45 வருடங்களாக கழகத்திற்காக அரும்பாடுபட்டவராவார். கிளைச் செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கி படிப் படியாக உயர்ந்து இன்று மாவட்டப் பொருளாளராக இருக்கிறார்.
![M.P Notice](http://image.nakkheeran.in/cdn/farfuture/t5paHM2cF6c3fhZO501DHYzJbiFsu6pEoTAFd9WqQ3c/1569391973/sites/default/files/inline-images/sigamani%202.jpg)
அவருடைய கடின உழைப்பால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டால் இன்று கழகத்தலைவர் தளபதி அவர்களால் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
மிகவும் அமைதியானவர் யாரிடமும் கடிந்து கொள்ளாளமல் நல்ல வேட்பாளரை கழகத்தலைவர் அவர்கள் நமக்கு அறிவித்திருக்கிறார். மக்கள் தலைவர் அவர்களை முதல்வராக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போடு இருக்கிறார்கள். அதற்கு விக்கிரவாண்டி வெற்றி ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். விழுப்புரம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் க.பொன்முடி, எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் நாம் அனைவரும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து விக்கிரவாண்டி தொகுதியில் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும். அப்படிப் பெறப்பட்ட வெற்றியை நமது தலைவர் கலைஞர் அவர்கள் நினைவிடத்தில் சமர்பிப்போம்".