கடைசிக் கட்ட மக்களவைத் தேர்தலும், நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடக்கும் இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி மீது பிரதமர் மோடி கடும் எரிச்சலில் இருக்காருனு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன கரணம் என்று விசாரித்த போது டெல்லி விரும்பியபடி சகலத்தையும் எடப்பாடி செஞ்சிக்கிட்டுதானே இருக்கார் அப்படி இருந்தும் என்ன கோபம் என்று பார்த்தபோது துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சுக்கு கூடுதல் அதிகாரத்தையும் அதிகப்படியான மதிப்பையும் கொடுக்கணும்னு மோடி பலமுறை சொல்லியும் அதை எடப்பாடி பொருட்படுத்தவே இல்லையாம்.
![eps](/modules/blazyloading/images/loader.png)
அதனால் அவர்மேல் கடும் எரிச்சலில் இருக்கும் மோடி, மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமனையும், பியூஷ் கோயலையும் கூப்பிட்டு, "இனி எக்காரணம் கொண்டும் எடப்பாடி தரப்புக்கு மதிப்பு கொடுக்காதீங்க. அவர் சார்பில் யார் வந்தாலும் சந்திக்காதீங்க'ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம். இந்த விசயத்தைக் கேள்விப் பட்டு, ரொம்பவே ஆடிப்போன எடப்பாடி, "தேர்தல் முடிவுக்குப் பிறகு அமைச்சரவையை மாத்தியமைக்கப் போறேன். அப்ப, எல்லாத்தையும் சரி செஞ்சிடறேன்'னு கேரள கவர்னர் சதாசிவம் மூலம், மோடியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்காராம். மே 23க்கு பிறகு ஆட்சியைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று ஒரு ஆலோசனையில் இருக்கிறார்களாம் ஆளும்தரப்பு.