இன்று (27.10.2021) ராமபுரத்தில் அமைந்துள்ள எம்ஜிஅர் இல்லத்தில் அதிமுக கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், எம்.ஜி.ஆரின் பேரனுமான வி. ராமச்சந்திரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுகவில் தற்போது நிறைய குழப்பங்கள், பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் தலைமை முடிவு எடுக்கும். நிறைய பேர் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சொன்னதுபோல், இந்தக் கட்சி 100 ஆண்டு காலம் மேன்மேலும் வளர வேண்டும். அதற்கு எல்லாரும் ஒன்னுசேர்ந்து பாடுபட்டாதான் முடியும். அவ்வாறு ஒன்னு சேரும்போது எதுவும் பிரச்சனை என்றால் தலைமையில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அவர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் சென்று கலந்துரையாடி முடிவெடுங்கள். தொண்டர்கள் அனைவரும் சேர்ந்துதான் தலைமையை உருவாக்கினீர்கள். அதனால் உருவாக்கின தலைமையை மதித்து தயவுசெய்து நேரடியாக சென்று சந்தித்துப் பேசி முடிவெடுங்கள். தலைமை எதை ஏற்றுக்கொள்கிறதோ அதைத்தான் தொண்டர்களாகிய நாமும் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.