ஆளும்கட்சித் தரப்புக்கு இது தேர்தல் வெற்றித் தீபாவளி என்று அரசியல் வட்டாரங்களில் கூறிவருகின்றனர். இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, இடைத்தேர்தல் என்றால் அதில் கிடைக்கும் வெற்றி எப்படிப்பட்ட வெற்றியாக இருக்கும் என்பது ஜெயித்தரவர்களுக்கும், ஜெயிக்க விட்டவங்களுக்கும் நன்றாக தெரியும் என்கின்றனர். இடைத்தேர்தல் தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டிலும் கட்சிக்குதான் சாதகமான நிலை என்று உளவுத்துறை கடைசி நேரத்தில் முதல்வர் எடப்பாடிக்குக் கொடுத்த ரிப்போர்ட் பற்றி நக்கீரனில் முன்கூட்டியே கூறியிருந்தோம். அதே மாதிரி தான் ரிசல்ட்டும் வந்துள்ளது. வாக்குகளை எண்ண ஆரம்பித்ததும் முன்னணி நிலவரம் தங்களுக்கு சாதகமாக வந்தவுடன், உளவுத்துறை ஐ.ஜி.சத்தியமூர்த்தியைத் தொடர்பு கொண்டு சரியான ரிப்போர்ட்டு என்று மகிழ்ச்சியையும், நன்றியையும் முதல்வர் எடப்பாடி உற்சாகமாக தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
அதே போல் ஆளும்கட்சித் தரப்புக்கு இது வெற்றித் தீபாவளி என்பதையும் தாண்டி கலெக்ஷன் தீபாவளியாவும் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத்துறை என்று சகல துறைகளிலும் தீபாவளி கலெக்ஷனும், வெயிட்டான பங்கு பிரிப்புகளும் நடந்துள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக உள்ளாட்சித் துறையில் அமைச்சரின் அன்-அபிஷியல் உதவியாளராக இருப்பவர் மூலம் ஒவ்வொரு நகராட்சியும் 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் கோல்ட் காயினைக் கொடுக்க வேண்டும் என்றும், மாநகராட்சிக்கு இதைவிடக் கூடுதலாக இருக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
பேரூராட்சிகளுக்கு அதுக்கு தகுந்த மாதிரி அன்பளிப்பு இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று சென்னையில் இருந்து இன்ஷ்ஸ்ட்ரக்ஷன் போனதாக கூறுகின்றனர். பிறகு "நேரில் வரவேண்டாம். வரும் நபர்களிடம் கொடுக்கவும் அடுத்த தகவல் அனுப்பப்பட்டு, அதன்படி மெஹா வசூலும் விறுவிறுப்பாவே நடந்துள்ளதாக கூறுகின்றனர். இப்படி அனைத்து துறைகளிலும் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தத் தீபாவளி அமர்க்களமாக இருந்துள்ளதாக கூறுகின்றனர்.