Skip to main content

சீனியர்களை ஓரங்கட்டிய எடப்பாடி! கொந்தளிப்பில் அதிமுக சீனியர்கள்!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

அ.தி.முக. தரப்பில் ராஜ்யசபா சீட்டுக்கு பலத்த போட்டி இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத முன்னாள் மந்திரி முகமதுஜானும் மேட்டூர் சந்திரசேகரும் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா வேட்பாளர்களா அறிவிக்கப்பட்டு, அவங்க வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யும் ஆயிட்டாங்க.  அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பளிக்கலாம்ன்னு ஓ.பி.எஸ். சொல்லியிருக்கார். எடப்பாடியோ, அவர் வேண்டாம். தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பளிக்கலாம்ன்னு சொல்லியிருக்காரு. 
 

admk



சீனியர் அமைச்சர்களோ, இந்த ரெண்டு பேருமே வேணாம். இதுவரை நாடாளுமன்றம் போகாத ஒரு முஸ்லிம் பிரமுகருக்கு வாய்ப்பு கொடுப்போம்ன்னு சொன்னாங்க. எடப்பாடியோ, முன்னாள் அமைச்சர் முகமது ஜானை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோமேன்னு சொல்ல, அதுக்கு எல்லோரும் தலையாட்டிட்டாங்களாம். முகமதுஜான், சமீபத்தில் முதல்வர் எடப்பாடியை வெயிட்டா கவனிச்சார்ன்னு அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே பேச்சு அடிபடுது. இதேபோல் இன்னொரு சீட்டில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவரான மேட்டூர் சந்திரசேகரனை ராஜ்யசபாவுக்கு அனுப்பு வோம்ன்னு, தன் அமைச்சரவை சகாக்களிடம் எடப்பாடி ஓகே. வாங்கிட்டாருனு சொல்லப்படுகிறது. எடப்பாடிக்கு பர்சனல் உதவிகள் பலவற்றையும் செய்பவர் சந்திரசேகரன் என்பதால் அவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் மேட்டூர் சந்திரசேகருக்கு சீட் கொடுத்த எடப்பாடி மேலே அதே சேலம் மாவட்டத்திலேயே அதிருப்தி இருக்கிறது என்று அதிமுகவினர் கூறுகின்றனர். எடப்பாடியின் வலது கரம்போல் செயல்படும் சேலம் இளங்கோவன், அவரது டெல்லி தொடர்புகளையும் கவனித்துக்கொள்பவர். அதனால் அவர் தனக்கு ராஜ்யசபா பதவி கிடைக்கும்ன்னு பெரிதும் நம்பியிருந்தாராம். ஆனால், பழம் நழுவி சந்திரசேகர் மடியில் போய் விழுந்து விட்டதை ஜீரணிக்கமுடியாத இளங்கோவன், எடப்பாடிக்கு எதிராக எரிமலையாய் குமுறி வெடித்துக்கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் கட்சி சீனியர்கள் உள்ளிட்ட பலரையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்