




Published on 07/09/2021 | Edited on 07/09/2021
திமுக மாணவரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (06.09.2021) திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வும், மாநில மாணவரணி செயலாளருமான சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.