Published on 09/07/2019 | Edited on 09/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக 37 இடங்களை கைப்பற்றியது. மத்தியில் பாஜக அரசு தனி பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. நேற்று நாடாளுமன்ற கூட்ட தொடரில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, வாஜ்பாய் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. வாஜ்பாய் எனக்கு தந்தையை போன்றவர். பட்ஜெட்டில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இடம்பெறவில்லை, அரசு அந்த திட்டத்தை மறந்துவிட்டதா அல்லது வாஜ்பாயையே மறந்துவிட்டதா? என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். மேலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் தீவிரமாக செயல்பட்டார். மேலும் பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பேசினார்.