Skip to main content

தமிழ்நாட்டில் வரும் இடைத்தேர்தலில் திமுக,காங்கிரஸ் யாருக்கு வாய்ப்பு?

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

கன்னியாகுமரி எம்.பியான வசந்தகுமார், தன்னோட நாங்குனேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா பண்ணிட்டாரு. இடைத்தேர்தலை சந்திக்கப் போகும் நாங்குனேரியை பீட்டர் அல்போன்ஸ், ராணி வெங்க டேசன்னு காங்கிரஸ் பிரமுகர்கள் குறி வைக்கிறாங்க. ஒருவேளை, பொதுத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட சோளிங்கரை இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது போல நாங்குனேரியிலும் நடக்கலாம். தி.மு.க. சைடில் ஆரோக்கிய எட்வின் பெயர் அடிபடுது. களக்காடு மாஜி பேரூராட்சித் தலைவர் பி.சி.ராஜனும் சீட் வாங்கும் முயற்சியில் இருக்கிறார். 

 

by election



தமிழக காங்கிரஸ் பிரமுகர்களோ,  நாங்குனேரியை தி.மு.க.விடம் விட்டுக் கொடுத்துடாதீங்கன்னு ராகுலை வலியுறுத்தத் திட்ட மிட்டிருக்காங்க. பணப்பட்டு வாடாவால் நிறுத்தப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதியோடு சேர்ந்து விரைவில் இடைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் நாங்குனேரியில் நிற்கப்போவது தி.மு.க.வா, காங்கிரசான்னு ரெண்டு கட்சித் தலைமையும் ஆலோசிச்சி முடிவெடுக்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்