Published on 06/04/2021 | Edited on 06/04/2021
![Trichy ADMK Members circulated money for voters](http://image.nakkheeran.in/cdn/farfuture/RdyofntyG7vr_O86dxs1WpAXst3VOzogyCltTwru4qs/1617684614/sites/default/files/inline-images/th-1_923.jpg)
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய நிலையில், எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக வேட்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆயிரம் ரூபாயும் வாக்களிப்பதற்காக நேற்று கொடுக்கப்பட்ட பூத் ஸ்லிப்பின் போது ஆயிரம் ரூபாயும் வாக்காளர்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் கொடுத்துள்ளனர்.
அதிலும் நேற்று ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பரஞ்சோதி உள்ளிட்டோர் விடிய விடிய வாக்காளர்களை தூங்கவிடாமல் அவர்களுக்கு தாங்கள் கொடுத்த வாக்குறுதியின்படி பணப் பட்டுவாடா செய்து முடித்ததாக அத்தொகுதி மக்கள் தெரிவித்தனர்.