நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்துக் கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒரு நேர்மையான தேசீய சிந்தனை உள்ள தலைவர். ஆம்பிளை. ???????????????????????????? https://t.co/biT1ES9vrJ pic.twitter.com/3VUlRiu3zI
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) December 19, 2019
இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில், இதைவிட தெளிவாக குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேச முடியாது. “கமல்” ஊர்வலத்துக்கு கிளம்புமுன் யோசிச்சுக்குங்க. நாட்டு நலன் முக்கியம்னு நினைச்சா தேசத்துரோகிகளோடு சேரக்கூடாது என்றும், தமிழகத்தில் ஒரு நேர்மையான தேசீய சிந்தனை உள்ள தலைவர். ஆம்பிளை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.