தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் திடீரென தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று நீட் தேர்வு குறித்து ஆவேசமாக சட்டப்பேரவையில் விவாதம் நடந்த நிலையில், அது குறித்து தமிழக கவர்னரிடம் மனு அளிக்க பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று சந்தித்துள்ளனர். பா.ஜ.க. எம்.எல்.ஏக்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் சற்றுமுன் ஆளுநரை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் பாஜக மாநில தலைவர் எல் முருகன் பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.