Skip to main content

"கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்"... அமெரிக்கா அதிபர் ட்வீட் குறித்து எச்.ராஜா கருத்து!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000 ஐ கடந்துள்ளது. இதனையடுத்து மருத்துவ ஊழியர்கள் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோ குளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்த நிலையில், இம்மருந்தினை தங்களுக்கு இந்தியா வழங்க வேண்டும், மருந்தை அனுப்பாவிட்டால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார். உலகம் முழுவதிலும் விற்பனையாகும் இந்த ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தில் 70 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் சூழலில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியத் தேவைக்குப் போக, கூடுதல் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது.

 

 

bjp



இந்தியாவின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "அசாதாரண நேரங்களுக்கு நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. HCQ குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதனை எப்போதும் மறக்க மாட்டேன். இந்தப் போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே உதவி புரிந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

nakkheeran app



இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், முதலில் ஒரே நேரத்தில் வீட்டு மின் விளக்குகளை அணைத்து விட்டு, மீண்டும் ஒரே நேரத்தில் ஆன் செய்தால் கிரிட் பாதிக்கும் என்று பேசிய நிபுணர்கள். நேற்று அமெரிக்கா இந்தியாவை மிரட்டியதாக பரப்புரை செய்தனர். ஆனால் எல்லாம் “கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்” என்றாகியது என்றும், அதேபோல் கரோனா வைரஸ் எண்ணிக்கை குறித்து எச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, என் பதிவு சுகாதாரத்துறை செயலரின் அறிக்கையின் தகவல் இதில் மதம் எங்கே வந்தது. வாருங்கள் வெளியேபோய் இருமுவோம், தும்முவோம் கரோனாவை பரப்ப என்று ட்விட்டரில் பதிந்த இன்ஃபோசிஸ் அதிகாரி செயல் என்னவகை. வாணியம்பாடியில் அதிகாரிகளை சிறை பிடித்தது என்ன வகை. உங்களுக்கு மதம் பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்