Skip to main content

பொய் பரப்பும் நடிகர்கள் இதுபற்றி ஏன் பேசுவதில்லை... நடிகர் சிவகுமார் பேசியது குறித்து எச்.ராஜா சர்ச்சை கருத்து!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

bjp

 


நிகழ்ச்சி ஒன்றில் திருப்பதி தேவஸ்தானம் குறித்து நடிகர் சிவக்குமார் அவதூறாகப் பேசியதாகத் திருப்பதி தேவஸ்தான போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமலை திருப்பதி சொத்துகளை விற்பனை செய்யும் விவகாரத்திற்கு எதிராக நடிகர் சிவகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறாகப் பேசியதாக தேவஸ்தான விஜிலென்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. நடிகர் சிவகுமார்  உட்பட 12 பேருக்கு எதிராக அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 


இந்த நிலையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், திருப்பதி கோவிலை பற்றி இழிவாகப் பேசியுள்ள தமிழக நடிகர் உள்ளிட்ட 8 பேர் மீது திருமலை தேவஸ்தானம் வழக்குப் பதிந்துள்ளது. ஆனால் தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் பற்றி இழிவாகப் பேசிய இதே இந்து விரோதிகள் மீது அறநிலையத்துறை ஏன் வழக்குப் பதியவில்லை. இவர்களும் இந்து விரோதிகள் அதனால் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து இங்கு மதப் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது. எனவே இந்த நடவடிக்கை. சமீபத்தில் தமிழகத்தில் பல மசூதிகளிலிருந்து 100 கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தஞ்சைப் பெரிய கோயில், திருப்பதி பற்றி பொய்ப் பரப்பும் நடிகர்கள் இதுபற்றி ஏன் பேசுவதில்லை என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்