தமிழகத்தில் நடைபெற இருக்கும் நான்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது . இந்த நிலையில் திமுக, அதிமுக , அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சிஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் இடம்பெற்ற அதே கூட்டணியே திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் தொடர்கின்றன.இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதியில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெரும் கட்சியை பொறுத்து தமிழக்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்பதால் பெரிய கட்சிகளான திமுக , அதிமுக வேட்பாளர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடைத்தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர் என்று செய்தி வெளியாகிவருகிறது.இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் அதிமுக நிர்வாகிகளில் ஒரு சிலர் தினகரனுக்கும் , திமுக கூட்டணி கட்சியில் உள்ள நிர்வாகிகள் உட்கட்சி பூசலினால் ஒதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சில தொகுதிகளில் திமுக கட்சிக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு தராமல் இருப்பதால் கட்சியின் மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டது அதன்பின்பு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக ஓட்டுக்களை தினகரனின் அமமுக கட்சி பிரிப்பதால் அதிமுக நிர்வாகிகள் இடைத்தேர்தலில் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.