
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் மயானக் கொள்ளை திருவிழா என்பது மிகவும் விமர்சியானது. இன்று வேண்டுதலின் படி அம்மன் வேடமிட்டு மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்று. ஊர்வலமாக மக்கள் சென்றனர். அப்பொழுது திடீரென வேடிக்கை பார்க்க வந்த இரு தரப்பு இளைஞர்கள் மது போதையில் மோதிக்கொண்டனர்.
கட்டையாலும், அம்மன் வேடமிட்டவர் வைத்திருந்த அட்டை கத்திகளாலும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல ஆனது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட இளைஞர்கள் மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டதால் அந்த பகுதியே பயத்தில் உறைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸாரும் அந்த பகுதியில் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். போதை இளைஞர்கள் இரண்டு தரப்பாக மயானக்கொள்ளை திருவிழாவில் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.