





Published on 19/01/2023 | Edited on 19/01/2023
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (19.01.2023) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு ஆளுநருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.