Published on 01/03/2025 | Edited on 01/03/2025

கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை கிராமத்தில் புனித அந்தோனியர் ஆலயம் ஒன்று இருக்கிறது. இந்த தேவாலயத்தில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன்படி, இன்று இரவு தேர்பவனி விழா நடைபெற இருந்தது. அதற்காக, தேரை அலங்கரிப்பதற்காக உயரமான இரும்பு ஏணியை, மைக்கேல் பின்றோ, அருள் சோபன், மரிய விஜயன் மற்றும் அந்தோணி ஆகிய 4 பேர் எடுத்துச் சென்றனர். அப்போது, அந்த இரும்பு ஏணி மீது அங்கியிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் உரசியது.
அதில் மின்சாரம் பாய்ந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கோலாகலமாக திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.