தமிழகத்தை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது "கடந்த 1985க்கு பிறகு கர்நாடக மாநிலத்தில் ஆளுங்கட்சி திரும்ப ஆட்சிக்கு வந்ததில்லை. பாஜகவின் மீது உள்ள சலிப்புத் தன்மையால் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் பதுக்கி வைத்தவர்கள் ஆவர். 2000 ரூபாய் நோட்டால் கொள்ளை அடித்தவர்களுக்கு தான் பிரச்சனை. மதுபானக் கடை, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மின்னணு பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்.
2024 இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. 2024 இல் கட்சியின் தொண்டனாக வேலை செய்வேன். 2024 தேர்தலில் வெற்றி பெற்று டெல்லிக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பவர்களை வெற்றி பெற வேலை செய்வேன். தமிழகத்தை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.