Published on 20/03/2019 | Edited on 20/03/2019
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் விலகியுள்ளனர்.

தென்சென்னையைச் (மேற்கு) சேர்ந்த கிச்சா ரமேஷ் மற்று, தென்சென்னையைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்டோர் விலகியுள்ளனர். திருவள்ளூர் தெற்கைச் சேர்ந்த தக்காளி முருகேஷன், திருவள்ளூர் வடக்கைச் சேர்ந்த கிரிபாபு ஆகியோர் சமகவிலிருந்து விலகியுள்ளனர்.
கிச்சா ரமேஷ் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கிய கமல்ஹாசன் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார், ஆனால் 12 ஆண்டுகளாக உள்ள சமத்துவ மக்கள் கட்சி இன்னும் தொகுதிகளுக்கு கையேந்தும் நிலையில்தான் உள்ளது.