மன்னார்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு அருகில் வைக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அணியினரின் பிளக்ஸ் பேனரை தார்ப்பாய் கொண்டு மறைத்ததால் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பானது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவினர் அமைதி பேரணியாக சென்று கோபாலசமுத்திரம் தெற்கு வீதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது சிலை அருகில் ஈபிஎஸ் அணியினர் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவிக்க இடையூறாக இருப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
காவல்துறையினர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை காவல்துறையினர் தார்ப்பாய் கட்டி மறைத்தனர். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிப்பதில் இரண்டு தரப்பினரிடையே போட்டி நிலவியது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.