பா.ம.க இளைஞரணித் தலைவரும், தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தர்மபுரியில் போட்டியிடுகிறார்.
இதனை முன்னிட்டு பிரச்சாரம் செய்வதற்காக, தர்மபுரி, மேச்சேரிக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது மேடைக்கு அருகே வந்த தங்கராஜ் என்ற அதிமுக தொண்டர், ‘ஐயா, கடந்த முறை இங்கதான் நின்னு ஜெயிச்சீங்க. அதுக்கு அப்புறம் எங்க போனீங்க. 5 வருஷமா எங்க இருந்தீங்க. 8 வழிச் சாலைக்கு எதிராக மக்கள் போராடியபோது எங்க போனீங்க ஐயா' என்று கேள்வி எழுப்பினார். அவர் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போதே அதிமுக எம்.எல்.ஏ.வான செம்மலை வாயில் அடித்தார்.
அதைத்தொடர்ந்து காவலர்கள் அவரை இழுத்துச் சென்றனர். அதன்பின் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கராஜை அடித்தனர். இதனால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அதைத்தொடர்ந்து அன்புமணி பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கிளம்பினார்.