![Allocation of Departments to Ministers in Karnataka; Which department for whom?](http://image.nakkheeran.in/cdn/farfuture/ifQx4HYBljDwU5vVCPJ9oCdMAcKGB3EYV-1P8hVPf3k/1685183446/sites/default/files/inline-images/07_27.jpg)
கர்நாடகத்தில் இன்று அமைச்சர்களாக பதவியேற்ற 24 எம்.எல்.ஏ.க்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 20 ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் இவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதுவரை அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கப்படவில்லை. மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் 10 பேர் அமைச்சரானதால் மீதமுள்ள 24 இடங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பின் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருப்பவர்களின் இறுதிப்பட்டியல் தயாரானது. அவர்கள் இன்று காலை 11:45 மணியளவில் ராஜ்பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நிதித்துறையும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சராக பரமேஸ்வராவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மதுபங்காரப்பாவும், தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.