
தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக இன்று அதிகாலை முதல் மழைபொழிந்து வருகிறது. இன்று காலை சென்னையில் வேளச்சேரி, கிண்டி, பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.